பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.64 கோடி

By பிடிஐ

பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் 5-ல் ஒரு நாள் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக ரூ.64 கோடி செலவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்றார். அதன் பிறகு எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் குறை கூறிவந்தபோதும் அதைப் பொருட்படுத்தாமல் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அவரது வெளிநாட்டுப் பயணம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளி யுறவு அமைச்சகம் தெரிவித்த தகவல் வருமாறு:

நவாஸ் ஷெரீப் பிரதமரான பிறகு 65 தடவை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். இதுவரை பிரதம ராக பதவி வகித்துள்ள 940 நாட் களில் 185 நாட்கள் (5-ல் ஒரு நாள்) வெளிநாட்டில் இருந்துள்ளார்.

631 அதிகாரிகளும் அவருடன் சென்றதில் மொத்தம் ரூ.63.8 கோடி செலவாகி உள்ளது. அதேநேரம் வெறும் 35 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளார்.

அதிகபட்சமாக பிரிட்டனுக்கு 17 முறை பயணம் மேற்கொண்டுள்ள ஷெரீப் அங்கு சுமார் 2 மாதங்களை கழித்துள்ளார். இதில் அலுவல் ரீதியாக தங்கியது 32 நாட்கள் ஆகும். அடுத்தபடியாக அமெரிக்காவில் 18 நாட்கள் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

25 mins ago

இந்தியா

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்