ஆப்கன் வங்கிகளில் அலைமோதும் கூட்டம்; பெண் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய நிர்வாகம்

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கையில் ஆட்சி சென்றுவிட்டதால் மீண்டும் கடுமையான வாழ்க்கைமுறைக்குள் செல்ல விரும்பாமல் அங்குள்ள மக்கள் வெளியேற முயற்சித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக அவர்கள் தத்தம் வங்கிக் கணக்குகளில் உள்ள சிறிய அளவிலான பணத்தையும் கூட எடுத்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், ஆப்கானிஸ்தான் வங்கிகளில் பெண் ஊழியர்கள் இனி வேலைக்கு வரவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் சட்டத்தின் பெண் கல்வி, பெண்கள் வேலைபார்ப்பது, பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் வழங்குவது ஆகியன ஹராமாகப் பார்க்கப்படுகிறது.

அதனால், பெண் ஊழியர்கள் வேலைக்கு வரவேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆப்கன் வங்கிகளில் பெரும்பாலும் பெண்கள் பணியில் இருந்துவந்த நிலையில், தற்போதைய நெருக்கடியான சூழலில் வங்கிப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. தனது பணி பறிபோனது குறித்து நூர் கத்தேரா என்ற 43 வயது பெண் கூறியதாவது:

''நான் எனது பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். சில துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் என்னுடன் வீடு வரைக்கும் வந்தனர். இனி இவரை வேலைக்கு அனுப்பாதீர்கள். அவருக்குப் பதில் வீட்டில் உள்ள ஆண்கள் யாரேனும் வேலைக்கு வாருங்கள் என்று சொல்லிச் சென்றனர்.

பெண்கள் பணிக்கு வரக்கூடாது என்ற உத்தரவு மிகவும் விந்தையாக உள்ளது. நான் அஜிசி வங்கியில் கணக்குத் துறையில் பணி புரிந்தேன். நான் பணியில் சேரும் போது நானே ஆங்கிலம் கற்றேன். நானே கணினி அறிவையும் வளர்த்துக் கொண்டேன். இப்போது நான் மீண்டும் அடுப்பங்கறைக்கு செல்லப்போகிறேன்'' என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

38 mins ago

ஜோதிடம்

41 mins ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்