சிட்னியில் மேலும் நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

சிட்னியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “சிட்னியில் கரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு நான்கு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான சிட்னி வாசிகள் அடுத்த ஒரு மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதியுடன் முடிவடையும். கரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் இந்தியா உட்பட பல நாடுகளில் கரோனா 2-ம் அலையின் வேகம் சற்று தணிந்துள்ள போதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்