பெகாசஸ் சர்ச்சையில் உண்மை இல்லை: சவுதி அரேபியா மறுப்பு

By செய்திப்பிரிவு

பெகாசஸ் மென்பொருள் மூலம் சவுதி பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை சவுதி அரேபிய அரசு மறுத்துள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம், உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைப் போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரின் பேரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இது தொடர்பான விசாரணையில், வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன், தி வயர் ஆகிய ஊடக நிறுவனங்களும் ஈடுபட்டன. இதில் பலரின் ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியா, சவுதி அரேபியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இந்த மென்மொருளைப் பயன்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “சவுதி அரேபியாவின் பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவலை மறுக்கிறோம். இதில் எந்த உண்மையும் இல்லை. சவுதி அத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்