ஆராய்ச்சியில் சாதனை படைத்த 6 இந்தியர்க்கு விருது

By பிடிஐ

அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சியில் சாதனை படைத்த 106 இளம் விஞ்ஞானிகள், இன்ஜினீயர்களுக்கு அதிபர் ஒபாமா உயரிய விருதினை வழங்குகிறார். இதில் 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்க ஆண்டு தோறும் இளம் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை அதிபர் மாளிகை நேற்றுமுன்தினம் வெளியிட்டது.

இதில் 106 இளம் விஞ்ஞானி கள், இன்ஜினீயர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டி யலில் மிலிந்த் குல்கர்னி (பர்தியூ பல்கலைக்கழகம்), கிரண் (ஹார்வர்டு பல்கலை.), சச்சின் படேல் (வண்டர்பில்ட் மருத்துவ பல்கலை.), விக்ரம் ஷியாம் (நாசா), ராகுல் (பெனிஸ்வேனியா பல்கலை), ஸ்வாடக் படேல் (வாஷிங்டன் பல்கலை) ஆகிய 6 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் விரைவில் நடைபெற உள்ள விழாவில் அதிபர் ஒபாமா விஞ்ஞானிகளுக்கு விருதுகளை வழங்க உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்