செம்மை காணுமா செர்பியா? - 6

By ஜி.எஸ்.எஸ்

இளவரசர் ஜார்ஜ் தனக்கு அரியணையில் நாட்ட மில்லை என்று ஒதுங்க, அவர் தம்பி அலெக்ஸாண்டர் ‘செர்புகள், க்ரோட்டுகள் மற்றும் ஸ்லோவேன்களின் அரசாங்கத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

பால்கன் போர்களில் இளவரசர் அலெக்ஸாண்டர் மிகச் சிறப்பாக வியூகம் அமைத்துப் போரிட்டு செர்பியாவை வெற்றி பெறச் செய்தார். செர்பிய சாம்ராஜ்யத் திலிருந்து துருக்கியர்கள் தங்கள் படைகளை பின்வாங்கிக் கொண்டனர். அலெக்ஸாண்ட ருக்கு பூ மழை பொழிந்து வாழ்த்து தெரிவித்தார்கள் மக்கள்.

முதலாம் உலகப்போர் வெடித்த காலத்தில் செர்பிய ராணுவத்தின் தலைவராக கருதப்பட்டார் அலெக் ஸாண்டர். செர்பிய ராணுவம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. ஆக்கிரமிக்க வந்த ஆஸ்திரியா-ஹங்கேரி ராணுவத்தினரை ஓடஓடவிரட்டியது.

எனினும் 1915-ல் பல திசைகளிலி ருந்தும் (ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, பல்கேரியா) வந்த எதிர்ப்புகளுக்கு செர்பிய ராணுவத் தினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

1918-ல் ஸ்லோவேன்கள், க்ரோட்டுகள், செர்புகள் ஆகிய வர்கள் கொண்ட குழு ஒன்று அலெக்ஸாண்டரைப் பேச அழைத் தது. இதுவே அந்தப் புதிய ராஜாங்கம் (Kingdom of Serbs, Croats and Slovenes) பிறக்கக் காரணமாக இருந்தது.

இதற்குள் மன்னராகியிருந்த அலெக்ஸாண்டர், ரோமானிய இளவரசியைத் திருமணம் செய்து கொண்டார். கொஞ்சம் சர்வாதி காரத் தன்மையாகவே ஆட்சியை நடத்தினார் எனலாம். புதிய அரசிய லமைப்புச் சட்டத்தை அறிமுகப் படுத்தினார். அது முக்கிய அதிகாரங்கள் எல்லாம் மன்னருக்கு தான் என்றது. ஆண்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டுப் போடலாம் என்றார். இது அப்போதைய சூழலில் சகஜம். ஆனால் தேர்தலில் வாக்களிப்பு ரகசியமானதாக இருக்காது என்றார் (ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு நுழைவு வாயில். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபரின் நுழைவுவாயில் வழியாகச் சென்றுதான் வாக்களிக்க வேண்டும்!).

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் நடைபெற்ற பாரிஸ் அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய நாடு உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டது. அதுமட்டு மல்ல அதன் எல்லைப்பகுதிகள் மேலும் கொஞ்சம் விரிவாக்கப் பட்டன. பக்கத்து நாடுகளான ஆஸ்திரியா, ஹங்கேரி, க்ரோவேஷியா, ஸ்லோவேனியா ஆகியவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சப் பகுதிகள் செர்பியாவுடன் இணைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஹங்கேரி யும் பல்கேரியாவும் தன்னை எதிர்க்கலாம் என்று கருதியவுடன் செக்கோஸ்லாவாகியா மற்றும் ரோமேனியா ஆகிய நாடுகளுடன் ஓர் உடன்படிக்கையில் கையெழுத் திட்டது செர்பியா. அதாவது இந்த மூன்று நாடுகளில் எதை வெளிநாடு ஆக்ரமித்தாலும், மற்ற இரு நாடுகளும் அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துச் செயல்படும்.

ஆனால் உள்ளூர்க் கலவரங்கள் தான் பெருமளவில் ஏற்பட்டன. முதலில் குரல் கொடுத்தது க்ரோட்டுகள். ‘எங்களுக்குத் தன்னாட்சி உரிமை வேண்டும்’ என்று குரல் கொடுத்தார்கள். தங்களுக்கென ஒரு தனி நாடாளுமன்றத்தை க்ரோட்டுகள் உருவாக்கிக் கொண்டனர்.

இந்த மோதல் மிக விபரீத நிலையை விரைவில் எட்டியது. க்ரோவேஷியாவின் விவசாயக் கட்சித் தலைவர் ராடிக் என்பவர். அந்தப் பகுதியின் மிக முக்கியத் தலைவர். க்ரோவேஷியாவுக்குத் தன்னாட்சி வேண்டும் என்ற முழக்கத்தை அதிகமாகவே வெளிப் படுத்திய இவர் நாடாளுமன்ற வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்தது செர்ப் இனத்தைச் சேர்ந்த ஒருவர். கலவரங்கள் உச்ச நிலையை எட்டின.

இதைத் தொடர்ந்து மன்னர் அலெக்ஸாண்டர் சில உடனடி நடவடிக்கைகளை எடுத்தார். அரசியலமைப்பு சட்டத்தை முடக் கினார். ‘இனி எனது ஆட்சிப் பகுதி சர்வாதிகாரத்துக்கு உட்பட்டது’ என்றார். இந்த சர்வாதிகாரம் முதல் கட்டமாக இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் அதற்குப் பிறகு மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்தார். தனது நாட்டின் பெயரை யுகோஸ்லாவியா என்று மாற்றினார்.

சர்வாதிகார ஆட்சியில் எதிர்ப் புகள் நசுக்கப்பட்டன. எனினும் பொதுமக்களிடையே ஒரு வெறுப்பு அதிகரித்து வருவதை மன்னர் உணர்ந்தார். பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். தன் உயிருக்கு ஆபத்து என்ற பயம். 1934-ல் பிரான்ஸுக்கு ஒரு முறை சென்றிருந்தார். நட்பு விஜயம். அப்போது பல்கேரியா வைச் சேர்ந்த ஒருவன் இவரைப் படுகொலை செய்தான்.

அலெக்ஸாண்டருக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் பீட்டர் அரியணை ஏறினார். அப்போது அவன் பதினெட்டு வயது நிரம்பாத மைனர்.

காலம் நகர்ந்தது. உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு தலைவரின் கையில் யுகோஸ்லாவிய ஆட்சி வந்து சேர்ந்தது.

(உலகம் உருளும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

11 mins ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்