பிரான்ஸில் 3-வது நாளாக 10,000-ஐக் கடந்த கரோனா

By செய்திப்பிரிவு

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 12,500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “டெல்டா வைரஸ் பரவல் காரணமாக, நாட்டில் கடந்த மூன்று நாட்களாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 12,500 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,11,472 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வாய்ப்பு வரும்போது விரைவாக கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் அரசு வலியுறுத்தி வருகிறது.

டெல்டா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது.

அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

24 mins ago

தமிழகம்

14 mins ago

விளையாட்டு

33 mins ago

சினிமா

34 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

55 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்