பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாக்கு

By ஏஎன்ஐ

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தங்கள்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாக் பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் தெஹ்ரீப் இ இன்ஃசாப் கட்சியின் தலைவரும், பிரதமருமான இம்ரான் கான்.

அப்போது அவர் பேசியதாவது:

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தங்கள்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன. ஏனென்றால், இந்த இரு அமைப்புகளின் சித்தாந்தங்கள் முஸ்லிம்களை மட்டும் இலக்காக வைக்கவில்லை, சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பட்டியலினத்தவர்கள் ஆகியவையும் சமமான குடிமக்களாக கருதவில்லை.

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரம் 370வது பிரிவை பிரதமர் மோடி ரத்து செய்தது அட்டூழியமானது. ஆனால், சர்வதேச அளவில் காஷ்மீர் மக்களுக்காகவும், அவர்களின் போராட்டத்துக்காகவும் துணையாக நான் இருப்பேன்.

காஷ்மீர் மக்களின் தூதராக இருப்பேன். காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று அந்த மக்களுக்கு ஆதரவாக இருப்பேன். மனிதநேயத்துக்கே முன்னுரிமை என்ற சீனாவின் அடிப்படையில் பொருளாதார திட்டங்களை தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி செயல்படுத்தி வருகிறது.”

இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்தார்.

சமீபத்தில் மத்திய தெற்கு ஆசிய மாநாட்டு தாஷ்கென்டில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் நிருபர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவிடம் பேச்சுவார்த்தைக்கு எவ்வாறு செல்வது என்று கேட்டனர்.

அதற்கு இம்ரான் கான் பதில் அளிக்கையில் “ நாங்கள் நாகரீகமான அண்டை நாட்டவர்களாக வாழ்கிறோம். நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம் என்று இந்தியாவிடம் கூறுகிறோம். ஆனால், ஆர்எஸ்எஸ் மனநிலையில் வந்தால் நாங்கள் என்ன செய்யமுடியும்”எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

8 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்