பிரிட்டன் சுகாதார செயலர் சாஜித் ஜாவித்துக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

பிரிட்டன் நாட்டு சுகாதார செயலருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரிட்டன் சுகாதார செயலர் சாஜிட் ஜாவித். இவர் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், இவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்து விதிகளின்படி சாஜித் 10 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார். அவருக்கு மீண்டும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு அதில் அவருக்கு நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அவர் இயல்புகு திரும்புவார்.

ஜாவித்துடன் சமீப நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தனக்கு பாதிப்பு ஏற்பட்டது குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நல்ல வேளை நான் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டுவிட்டேன். எனக்கு மிக லேசானை அறிகுறிகளே உள்ளது. அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகிறேன்" எனக் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜாவித், பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்துள்ளார். ஆனால், இது குறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கரோனா முதல் அலையின்போது போரிஸ் ஜான்சன் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

55 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்