செம்மை காணுமா செர்பியா? - 3

By ஜி.எஸ்.எஸ்

செர்பியாவில் தொடங்கப் பட்டது கருப்புக்கை இயக்கம். போஸ்னி யாவுக்கு வரவிருக்கும் ஆஸ்திரிய இளவரசரை தீர்த்துக் கட்டத் தீர்மானித்தது அந்த இயக்கம்.

கருப்புக்கையின் இயக்கத் தின் தலைவராக அப்போது விளங்கியவர் ட்ரகுடின் டிமிட்ரே ஜேமிக். பெயர் மட்டுமல்ல, ஆளும் கரடுமுரடானவர்தான். இவர் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி, இரண்டு வெடி குண்டுகள் மற்றும் ஒரு சிறு சயனைடு குப்பி ஆகியவை வழங் கப்பட்டன. சயனைடு குப்பி எதற்காக? இளவரசரைத் தீர்த்துக் கட்டியவுடன் குப்பியில் உள்ள சயனைடைக் குடித்து தற்கொலை செய்து கொள்வதற்காக! அப்போதுதானே கருப்புக்கை இதில் சம்பந்தப்பட்டிருப்பது யாருக்கும் தெரியாமல் போகும்.

தன்னுடைய உயிரை இழப் பதற்கு யாராவது சம்மதிப்பார்களா? மாட்டார்கள்தான். ஆனால் வெளி நாட்டு சக்தியான ஆஸ்திரியாவை எப்படியாவது துரத்த வேண்டும் என்ற வெறி அவர்களுக்கு. அது மட்டுமல்ல. அவர்கள் மூவருக்கும் தீவிரமான காசநோய். எப்படியும் அதிக நாள் வாழமுடியாது. அதற்குள் நாட்டுக்கு ஒரு 'நல்லது' செய்துவிட்டுப்போவோமே என்று நினைத்தார்கள் அவர்கள்.

இந்த மூன்றுபேரும் போஸ்னி யாவின் தலைநகரான சரயேவுவில் வசித்த வேறு ஐந்து பேரையும் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

ஜூன் 28, 1914 அன்று காலை பத்து மணியாவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அப்போது சரயேவு நகருக்கு ரயிலில் வந்து சேர்ந்தார்கள் இளவரசரும் அவரது மனைவியும். அவர்களை வரவேற்கச் சென்றிருந்தார் போஸ் னியாவுக்கான ஆஸ்திரிய கவர்னர். நகரின் முக்கிய அரங்கிற்கு அவர்களை அழைத்துக்கொண்டு போய் பிரமாண்டமான ஒரு வர வேற்பை அளிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தார் அவர். மூன்று கார்கள் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பின. முதல் காரில் நகர மேயரும் போலீஸ் கமிஷ்னரும் இருந்தனர்.

இரண்டாவது காரில் இளவர சரும் அவரது மனைவியும். கூடவே கவர்னரும். இரண்டாவது காரின் மேற்புறம் திறந்துவிடப் பட்டிருந்தது. அப்போதுதானே தெருவின் இரண்டு பக்கங்களிலும் நிற்கும் மக்களால் இளவரசரையும் அவர் மனைவியையும் நன்றாகப் பார்க்க முடியும்?

சற்றுத் தள்ளி இன்னொரு காரும் வந்துகொண்டிருந்தது. அதில் இளவரசரின் கட்சியைச் சேர்ந்த இரண்டுபேர் வந்து கொண்டிருந்தனர். காவல்துறை எச்சரிக்கையாகத்தான் இருந்தது. கலவரம் செய்யக்கூடும் என நினைத்த 35 பேரை முன்னெச்சரிக் கையாக கைது செய்திருந் தார்கள். வழியெங்கும் காவல் காரர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். இந்த வரிசையில் கொலை செய்யக் காத்திருந்தவர்களும் எப்படியோ இடம் பிடித்து விட்டார்கள்.

முதல் ஆளைக் கடந்து கார் செல்லும்போது துப்பாக்கியை எடுக்க முயற்சித்தான் அவர்களில் ஒருவன். ஆனால் அப்போதுதான் தனக்குப் பின்னால் ஒரு போலீஸ் காரர் இருப்பதை கவனித்தான். “அடடா, நான் வெடிகுண்டைத் தூக்கி எறிந்தபிறகு, சயனைடு குப்பியை எடுப்பதற்குள் இந்த போலீஸ்காரர் என்னைப் பிடித்து விட்டால் என்ன செய்வது? ரிஸ்க் வேண்டாம். அடுத்த கூட்டாளி பார்த்துக்கொள்வான்” என்று சும்மா இருந்துவிட்டான். கார் மேலும் நகர்ந்தது.

பத்தேகால் மணி இருக்கும். இரண்டாவது கூட்டாளி தன் கையிலி ருந்த வெடிகுண்டை இளவரசர் இருந்த காரை நோக்கி வீசினான்.

கார் டிரைவர் திறமைசாலி. தவிர எந்த நேரமும் அந்த இடத்தில் இளவரசர் உயிருக்கு அபாயம் நேரலாம் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே ஏதோ ஒரு பொருள் தங்கள் காரை நோக்கி வருகிறது என்பதை உணர்ந்தவுடனேயே காரை மிக வேகமாகச் செலுத்தினார். அவர்களுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொரு காரின் மீது வெடிகுண்டு விழுந்தது. அதில் இருந்த இருவருக்கு பலத்த காயம். அதுமட்டுமா? வேடிக்கை பார்க்க வந்திருந்த பனிரெண்டு பேர் மீதும் வெடிகுண்டின் பாகங்கள் விசையுடன் விழுந்தன.

வெடிகுண்டை வீசியவன் தன்னிடமிருந்த சயனைடைக் குடித்துவிட்டு பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த மில்ஜக்கா நதியில் குதித்துவிட்டான். ஆனால் பாய்ந்து சென்ற சிலர் அவனைப் பிடித்து விட்டார்கள். அவன் குடித்த விஷம் வேலை செய்வதற்குள் அதில் ஒரு பகுதியை வெளியே எடுத்துவிட்டார்கள். பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில் அவன் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டான்.

இளவரசரின் காரை ஓட்டிய டிரைவர் கண்மண் தெரியாத வேகத்தில் காரில் பறந்தார். போகும் பாதை முழுவதும் இளவரசர் வருகைக்காக காலி யாக இருந்ததால் இந்த வேகம் சாத்தியமானது. இவ்வளவு வேக மாக கார் செல்லும் போது வெடி குண்டை வீசுவதோ, துப்பாக்கியால் சுடுவதோ பலனைத் தராது என்று முடிவெடுத்த மூன்றாமவன் சும்மா இருந்து விட்டான்.

நகர அரங்கில் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தபடி இளவரச ருக்கும் அவரது மனைவிக்கும் மிகப் பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது. “எனக்குப் பின்னால் வந்த காரில் என் கட்சிக்காரர் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்களே. அவர்கள் இப்போது எங்கே?” என்று கேட்டார் இளவரசர். வெடிகுண்டினால் அவர் களுக்கு பெரிய பாதிப்பு இல்லை யென்றும் அதிர்ச்சி நீங்கியவுடன் அவர்களும் வரவேற்பில் கலந்து கொள்வார்கள் என்றும் இளவரச ருக்கு கூறப்பட்டிருந்தது.

இப்போது தயக்கத்துடன் 'அந்த இருவரும் பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள்' என்று உண்மை யைச் சொன்னார்கள். “அப்படியா? நான் உடனே மருத்துவமனைக்குப் போக வேண்டும். அவர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டும்” என்றார் இளவரசர். விதி!

(உலகம் உருளும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்