மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உதவுவோம்: இந்தியாவுக்கு அமெரிக்கா உறுதி

By பிடிஐ

மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்காக, இந்தியாவுக்கு உதவுவோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:

மும்பை தாக்குதலுக்கு காரண மானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு, சாத்தியப்படக் கூடிய அனைத்து வகைகளிலும், அமெரிக்காவின் சட்டம் அனுமதிக் கும் அதிகபட்ச எல்லைவரை இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளோம். இந்தியாவுடன் நெருக்கமான உணர்வைப் பேணு வதற்கான அறிகுறியாக இது இருக்கும். இந்த உறவின் அனைத்து கோணங்களிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளைப் பார்த்துக் கொண் டிருக்கிறோம். ஹெட்லியின் வாக்குமூலத்தைக் கொண்டு, நாங்கள் முன்கூட்டியே ஒரு கருத்துக்கு வர விரும்ப வில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஹெட்லி, மும்பை தாக்குதல் வழக்கில் வீடியோ மூலம் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி அளித்து வருவது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு கிர்பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 secs ago

இந்தியா

19 mins ago

சினிமா

36 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்