தைவான் நிலநடுக்க பலி 36 ஆக உயர்வு: 2 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு

By பிடிஐ

தைவான் நிலநடுக்கத்தில் உயிரி ழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரிதுள்ளது. மேலும் 2 நாட்களுக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர்.

தைவானின் தெற்குப் பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தைனான் நகரில் இருந்த 17 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 170 பேர் உயிருடனும் 36 பேர் சடலமாகவும் மீட்கப் பட்டுள்ளனர்.

மேலும் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப் படுகிறது. அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 6-வது மாடியில் சிக்கியிருந்த ஒருவரும் தனது கணவரின் சடலத்துக்குக் கீழ் சிக்கியிருந்த ஒரு பெண்ணும் நேற்று உயிருடன் மீட்கப்பட்டனர்.

மேலும் ஒரு பெண்ணும், 8 வயது சிறுமியும் 5-வது மாடியில் சிக்கியிருப்பதை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். அவர்களை உயிருடன் மீட்க முயற்சி நடை பெறுகிறது. நிலநடுக்கத்தில் சில அடுக்குமாடி குடியிருப்புகள் மட்டுமே இடிந்துள்ளன. எனவே அந்த கட்டிடங்களை கட்டிய நிறுவனங்களிடம் விசாரணை நடத்த தைவான் அரசு முடிவு செய்துள்ளது. இனிமேல் ஐப்பானை போன்று நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் கட்டிடங்களை கட்ட வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்களுக்கு அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே தைவானின் புத்தாண்டு விடுமுறை நேற்று தொடங்கியது. எனினும், நில நடுக்கம் காரணமாக கொண்டாட் டங்கள் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.-





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

க்ரைம்

5 mins ago

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

57 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்