ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான 1.25 லட்சம் ட்விட்டர் கணக்கு நீக்கம்

By பிடிஐ

தீவிரவாத கருத்துகளை பரப்பவும் ஆதரவாகவும் செயல்பட்டு வந்த 1.25 லட்சம் பேருடைய கணக்கு களை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

சர்வதேச அளவில் தீவிர வாதத்தை பரப்ப சமூக வலை தளங்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. மேலும், தீவிரவாதத்துக்கு ஆட்களை சேர்க் கவும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். தற்போது சிரியாவில் பயங்கர வன்முறை களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதர வாகவும் ஆட்களை சேர்க்கவும் சமூக வலைதளங்களில் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தீவிரவாதத் துக்கு ஆதரவாக செயல்படு வோரின் கணக்குகளை கண் காணிக்க ட்விட்டர் நிறுவனம் பல குழுக்களை அமைத்திருந்தது. இந்தக் குழுக்கள் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் ட்விட்டர் கணக்குகளை பயன்படுத்து வோரை கண்காணித்து வந்தது. இதையடுத்து ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல் பட்டு வந்த 1.25 லட்சம் பேருடைய கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கையில், ‘‘கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1.25 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன’’ என்று கூறியுள்ளது. அதேநேரத் தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தா னில் இருந்து ட்விட்டரில் செயல் படுவோர் பற்றிய விவரங்களை இந்நிறுவனம் வெளியிடவில்லை.

‘இந்தியாவுக்கு எதிராக தீவிர தாக்குதல் நடத்தப்படும்’ என்று மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் முகமது சயீத், கடந்த 3-ம் தேதி ட்விட்ட ரில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தி ருந்தார். இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

வாழ்வியல்

4 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

37 mins ago

க்ரைம்

55 mins ago

விளையாட்டு

50 mins ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்