உலக மசாலா: மீண்டும் நீராவி இன்ஜின்!

By செய்திப்பிரிவு

உக்ரைனைச் சேர்ந்த கார் ஓட்டுனர்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி வருகிறார்கள். பெட்ரோல், காஸ் போன்றவற்றின் விலையேற்றத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. அதனால் மரத்துண்டுகளை எரித்து, நீராவி மூலம் வண்டி ஓடுவதற்கான ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் கணிசமாகப் பணம் மிச்சமாகிறது என்கிறார்கள்.

ஆட்டோ மொபைல் துறை மெதுவாக மின்சக்தியை நோக்கிப் பயணிக் கிறது. மரத்தை எரித்து, ஆற்றலைப் பயன்படுத்துவது என்பது பழைய வழிமுறை. முதல் உலகப் போரில் இப்படிப்பட்ட வாகனங்கள்தான் மிகவும் பிரபலமாக இருந்தன. இன்று உக்ரைன் ஓட்டுனர்கள் நவீன கார்களில் மர பர்னர்களையும் பாய்லர் களையும் பொருத்திக்கொள்கிறார்கள். யுஜின் செர்னிகோவ் தன்னுடைய ஓபெல் காரை இப்படி மாற்றிவிட்டார். ‘‘கார் ஓட்டுவது நாளுக்கு நாள் செலவு பிடித்த விஷயமாகிவிட்டது. அதைச் சமாளிப்பதற்குத்தான் இப்படி யோசித்தேன். நான் இயற்பியல் ஆசிரியர்.

மரத்தை எரித்து, எவ்வாறு எரிபொருளை எடுப்பது என்பதை 2 மாதங்களில் இணையத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். என்னுடைய காரில் மரம் எரிக்கும் கலமும் உலோகக் கேனையும் பொருத்தி, அவற்றை கார் இன்ஜினுடன் இணைத்துவிட்டேன்.

100 கி.மீ. தூரத்தைக் கடக்க 18 கிலோ மரத் துண்டுகள் தேவைப்படும். காஸுக்குச் செலவழிப்பதில் பாதிதான் செலவாகிறது. மணிக்கு 60 மைல் வேகத்தில் கார் பயணிக்கும். இது சுற்றுச்சூழலுக்கும் நல்லது. புகை கக்குவதில்லை. நீராவியும் கார்பன் டையாக்ஸைடு மட்டுமே வெளியேறும்’’ என்கிறார் செர்னிகோவ். இவரைப் பார்த்து ஏராளமானவர்கள் தங்கள் கார்களில் பர்னரையும் உலோகக் கலத்தையும் பொருத்திக்கொள்கிறார்கள்.

மீண்டும் நீராவி இன்ஜின்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர் ஆடம்ஸ் வித்தியாசமான போட்டோகிராபர். கண்ணில் உள்ள கருவிழியில் தெரியும் பிம்பங்களை மிக நுட்பமாகப் படம் பிடித்திருக்கிறார். ஒரு திருமணத்தில் மிக முக்கியமான காட்சிகளை எல்லாம் வெவ்வேறு மனிதர்களின் கண்கள் மூலம் படமாக எடுத்திருக்கிறார். கண் களை வரிசைப்படுத்தினால் திருமணத்துக்கு முன்பு மணப்பெண், திருமணத்தில் மணப்பெண், திருமணத்துக்குப் பின்பு மணப் பெண் என்று அழகான காட்சிகளாகத் தெரிகின்றன.

‘‘சிறிது மெனக்கெட்டால் இந்த மாதிரி படங்களை எடுத்துவிடலாம். மனிதக் கண்கள் வளைந்த கண்ணாடி போல இருக்கின்றன. கண்களுக்கு அருகில் விளக்கு வெளிச்சம் இருக்க வேண்டும். அதேபோல கண்களில் பிரதிபலிக்கும் மனிதர்கள் மீதும் வெளிச்சம் இருக்க வேண்டும். இரண்டும் ஒன்றாகச் சேரும்போது பிரமாதமான ரிசல்ட் கிடைக்கிறது. திருமண ஆல்பத்தில் கண் பிரதிபலிப்பு படங்கள்தான் என்னுடைய ஸ்பெஷல்!’’ என்கிறார் ஆடம்ஸ்,

அடடா! அற்புதம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

13 mins ago

வணிகம்

19 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

36 mins ago

ஓடிடி களம்

43 mins ago

விளையாட்டு

48 mins ago

க்ரைம்

53 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்