சீனாவில் முதல்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல்

By செய்திப்பிரிவு

சீனாவில் முதல்முறையாக மனிதருக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும் சீன ஆய்வகத்தில் கரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த பின்னணியில் சீனாவில் முதல்முறையாக மனிதர் ஒருவருக்கு H10N3 என்ற வகையைச் சேர்ந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "ஜென்ஜியாங் நகரில் 41 வயது நபருக்கு கடந்த ஏப்ரல் 28-ம் தேதி பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம். அவரது உடல்நலம் தேறியுள்ளது. விரைவில் அவர் வீடு திரும்புவார். அவரது குடும்பத்தினரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். அவரோடு தொடர்பில் இருந்தவர்களை தேடி வருகிறோம். இந்தவகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுவது அரிது" என கூறப்பட்டுள்ளது.

அவருக்கு எவ்வாறு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டது என்பது குறித்து சீன அரசு எவ்வித விளக்கத்தையும் வெளியிடவில்லை. கரோனாவால் ஏற்பட்டு வரும் பேரழிவு காரணமாக, சீனாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டால் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் அந்த நாட்டின் மீது திரும்புகிறது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறியதாவது:

சீனாவில் பல்வேறு வகையான பறவைக் காய்ச்சல்கள் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 2016-17-ம் ஆண்டில் H7N9 வைரஸ்பறவைக் காய்ச்சலால் 300 பேர்உயிரிழந்தனர். கோழிப்பண்ணை ஊழியர்களே பறவைக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கடந்த பிப்ரவரியில் சீனாவின் லியான்யங்கங் நகரில் H5N8 என்ற பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இது மனிதர்களை எளிதில் தொற்றும் தன்மைகொண்டது.

தற்போது சீனாவில் முதல்முறையாக H10N3 வைரஸ் வகை பறவைக்காய்ச்சல் மனிதருக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீன அரசு உண்மைகளை மூடி மறைக்கும் என்பதால் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

58 mins ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்