நேபாளத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

By பிடிஐ

நேபாளத்தில் அத்தியாவசிப் பொருட்களுக்கு கடும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதால் எல்லை யில் நிலவும் தடைகளை களைய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பின ரும் முன்வர வேண்டும் என்று ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய இயக்குநர் டேவிட் காட்ருத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேபாளத்தில் புதிய அரசியல் சட்டத்துக்கு எதிராக நடைபெறும் எல்லைப் போராட்டத்தால் கடந்த 3 மாதங்களாக உணவுப் பொருள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து வரும் பொருட்களை யே அந்நாடு சார்ந்துள்ளது. இந்நி லையில் சமீபத்திய வாரங்களில் சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை, உப்பு உள் ளிட்ட பொருட்களின் வரத்து குறைந் துள்ளது.

இதனால் விலைவாசி கடுமை யாக உயர்ந்துள்ளதால் மக்கள் தங்கள் உணவுத் தேவைக்கு போராட வேண்டியுள்ளது. நேபாள மக்கள் ஏற்கெனவே நிலநடுக் கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில் மற்றொரு பாதிப்பில் இருந்து அவர்கள் மீள்வது கடினம். மேலும் மிகப்பெரிய மக்கள் நலப் பிரச்சினையை உருவாக்கும்.

எனவே சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இப்பிரச்சி னைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். நேபாள எல்லைக்குள் அத்தியாவசியப் பொருட்கள் தடை யின்றி செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு டேவிட் காட்ருத் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

30 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்