இந்தியாவுடன் தொடர் பேச்சுவார்த்தை: பைஸர் தடுப்பூசி நிறுவனம்

By செய்திப்பிரிவு

எங்கள் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பைஸர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பைஸர் நிறுவனத்தின இயக்குனர் ஆல்பர்ட் கூறும்போது, “ நாங்கள் பல மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தும் எங்களது தடுப்பூசி இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை.

நாங்கள் பைஸர் தடுப்பு மருந்தை இந்தியாவில் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். கரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறோம். எங்களால் முடிந்த ஆதரவுகளை வழங்குவோம்” என்றார்.

இந்தியாவில் தற்போது வரை கோவாக்சின், கோவிஷில்ட் இரண்டு தடுப்பு மருந்துகள் கரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.மேலும் பிற நாடுகளில் பரிசோதிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா தொற்றுக்கு எதிராக அதிக எதிர்வினையாற்றும் தன்மை கொண்ட காரணத்தால் பைஸர் கரோனா தடுப்பு மருந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்களுக்கு எதிராக பைஸர் தடுப்பு மருந்து சிறந்த பலனை அளித்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

14 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்