தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக் கொண்டிருந்தால் இனி முகக்கவசம் தேவையில்லை: அமெரிக்க அதிபர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறந்த நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக நான் பெரிய அறிவிப்பை இன்று தெரிவிக்கிறேன். நீங்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் நீங்கள் பெரிய கூட்டத்தில் இல்லாத நேரத்தில் வெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

தடுப்பூசிகள் உங்கள் உயிரைக் காப்பற்றுவதுடன், உங்களைச் சுற்றியுள்ளவர்களைக் காப்பாற்றுகிறது. உங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ வழி செய்கிறது. உடனடியாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த அமெரிக்காவில் இதுவரை 39% மக்கள் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கரோனா தொற்றும், இறப்பும் பெருமளவு குறைந்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில்தான் கரோனா தடுப்பு மருந்து அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தலாம் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

சினிமா

16 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

9 hours ago

மேலும்