சவுதி அரேபியாவில் நகராட்சி தேர்தல்: முதல்முறையாக வாக்களித்த பெண்கள்

By பிடிஐ

சவுதி அரேபியாவில் நேற்று நடை பெற்ற நகராட்சி தேர்தலில் முதல் முறையாக பெண்கள் வாக்களித் தனர். அத்துடன் வேட்பாளராகவும் களம் இறங்கி உள்ளனர்.

மன்னர் ஆட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில், பெண்களுக்கு தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ உரிமை இல்லை. இதுதவிர வாகனம் ஓட்டவும் அனுமதி இல்லை. இதுபோல பல கட்டுப்பாடுகள் அங்கு அமலில் உள்ளன. இதற்கு அந்நாட்டு பெண்கள் மட்டுமல்லாமல் சர்வ தேச சமுதாயமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான இத்தகைய கட்டுப்பாடு களை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தற்காலிக நடவடிக்கையாக, பெண்கள் தேர்தலில் போட்டி யிடவும் வாக்களிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் 284 நகராட்சி கவுன்சில்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 6,000 ஆண்களும் 900 பெண்களும் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்களும் பெண்களும் தனித் தனியாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொது இடங்களில் ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த் துக்கொள்ள தடை விதிக்கப்பட்டி ருப்பதால், பிரச்சாரத்தின்போது ஆண் வாக்காளர்களை சந்திக்க முடியவில்லை என பெண் வேட் பாளர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், பெண்கள் தங்களை வாக் காளர்களாக பதிவு செய்வதற்கும் அதிகாரிகள் தடையாக இருந்ததாகக் குற்றம்சாட்டினர்.

இதனால் 10 வாக்காளர்களில் ஒருவர் மட்டுமே பெண் என்ற நிலையில் வாக்களித்துள்ளதால் பெண் வேட்பாளர்கள் வெற்றி பெறு வது மிகவும் கடினம் என கூறப் படுகிறது. ஆனாலும் தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் வாய்ப்பு கிடைத்ததே தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரியாத் நகரில் குழந்தைகள் நல மருத்துவராக உள்ள அமல் பத்ரெல்தின் அல்-சவாரி (60) கூறும்போது, “உண் மையைச் சொல்ல வேண்டு மானால், வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நான் போட்டி யிடவில்லை. தேர்தலில் போட்டி யிட்டதே எங்களுக்குக் கிடைத்த வெற்றிதான்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுலா

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்