சிரிய ராணுவ நடவடிக்கைக்காக பழிவாங்கப்பட்டதா பிரான்ஸ்?

By பிடிஐ

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான பிரான்ஸ் தாக்குதலுக்கு பழிவாங்கும் செயலாக பாரீஸ் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக பிரான்ஸ் ராணுவப் படைகளை அனுப்பியுள்ளது. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பாரீஸில் பட்டாக்லான் கலையரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டுமே 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த அரங்கில் இருந்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் ஜனாசக் கூறும்போது, எனக்கு அந்த தீவிரவாதிகள் பேசியது தெளிவாக கேட்டது. அவர்கள் "இது உங்கள் அதிபர் ஹாலந்தேவின் தவறு. அவர் சிரிய பிரச்சினையில் தலையிட்டிருக்கக் கூடாது என்றனர்" எனத் தெரிவித்தார். மேலும், இராக் குறித்தும் தீவிரவாதிகள் பேசியதாக அவர் கூறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் பல இடங்களில் நடத்திய தாக்குதலில் 120-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்