31 தமிழ் அரசியல் கைதிகள் ஜாமீனில் விடுதலை

By செய்திப்பிரிவு

இலங்கை சிறைகளில் அடைக் கப்பட்டுள்ள 31 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை உள்நாட்டுப் போரி ன்போது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர்.

தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து விடுவிக்கக் கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆனால் வழக்குகளை ரத்து செய்ய முடியாது, எனினும் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்தது.

இந்நிலையில் கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று 31 தமிழ் அரசியல் கைதிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களுக்கு மாஜிஸ்திரேட் கிஹான் ஜாமீன் வழங்கினார். 31 பேரும் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா மற்றும் கொழும்பு பயங்கரவாத தடைப் பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

11 mins ago

தமிழகம்

19 secs ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

52 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

5 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்