இந்திய-இஸ்ரேல் கூட்டு தயாரிப்பான பராக்-8 ஏவுகணை சோதனை வெற்றி

By ஐஏஎன்எஸ்

இந்திய, இஸ்ரேல் கூட்டாக தயாரித்துள்ள பராக்-8 ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது.

லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாத இயக்கத்திடம் ரஷ்ய தயாரிப்பு ஏவுகணைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ஏவுகணை திட்டங்களில் இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது.

இதற்காக இந்தத் துறையில் முன்னோடியான இந்தியாவுடன் இஸ்ரேல் இணைந்து செயல்படுகிறது. இரு நாடுகளின் கூட்டு தயாரிப்பில் பராக்-8 ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை இஸ்ரேல் கடற்படையின் போர்க்கப்பலில் இருந்து நேற்றுமுன்தினம் முதல்முறையாக சோதித்துப் பார்க்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.

ஏவுகணை சோதனை 100 சதவீத வெற்றி அடைந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் ராணுவத்தில் பராக்-8 ஏவுகணை சேர்க்கப்படும். தரையில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை இஸ்ரேல் எண்ணெய் கிணறுகளின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பராக்-8 ஏவுகணையின் அடுத்த சோதனை வரும் டிசம்பரில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலில் நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

59 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்