பிரேசிலில் கரோனாவுக்கு 2,07,095 பேர் பலி

By செய்திப்பிரிவு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,131 பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகினர்.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,131 பேருக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். 60,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக பிரேசிலில் கரோனா தொற்று எண்ணிக்கை 60,000-ஐத் தாண்டியுள்ளது. இதுவரை 83 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,07,095 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன. சமீப நாட்களாக ஐரோப்பாவிலும் கரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

51 secs ago

சினிமா

10 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்