சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு அதிகரிக்கும் கரோனா

By செய்திப்பிரிவு

சீனாவில் 5 மாதங்களுக்கு பிறகு கரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, “கடந்த ஐந்து மாதம் இல்லாத அளவுக்கு சீனாவில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. ஹெபே மாகாணம் மற்று பெய்ஜிங்கில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஹெபே மாகாணத்தில் மட்டும் நேற்று 82 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. லியோனிங் மாகாணத்திலும் கரோனா அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது. ஹூபே மட்டுமல்லாமல், சீனாவின் வடக்குப் பகுதிகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல் தடுப்பூசிக்கு சீனா அனுமதி அளித்தது. முன்னதாக, மருத்துவப் பணியாளர்கள் உட்பட சிறிய குழுவுக்கு 3 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அவசர காலப் பயன்பாட்டுக்காக அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவற்றில் தொற்று ஏற்படும் அபாயம் அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்து இலவசம் என்று சீனா அறிவித்துள்ளது.

சீனா கரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் துருக்கி, இந்தோனேசிய, பிலிப்பைன்ஸ் அகிய நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்