ஆறு வாரத்தில் சுமார் 6 லட்சம் டோஸ் மாடர்னா கரோனா தடுப்பு மருந்துகள் வந்தடையும்: ஸ்பெயின்

By செய்திப்பிரிவு

அடுத்த ஆறு வாரத்தில் சுமார் 6 லட்சம் டோஸ் மாடர்னா கரோனா தடுப்பு மருந்துகள் நாட்டிற்கு வந்தடையும் என்று ஸ்பெயின் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சர் சால்வேடார் கூறுகையில், “அடுத்த ஆறு வாரத்தில் சுமார் 6 லட்சம் மாடர்னா கரோனா தடுப்பு மருந்து நாட்டிற்கு வந்தடையும். அதுவரையில் மக்கள் பொதுவான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கரோனா தடுப்பு மருந்தை விரைவாகக் கொண்டு வரும் பணியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

இந்த நிலையில் உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியை மக்கள் கவனமாகப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்