ஆப்கானிஸ்தானில் 45 பயணிகளுடன் பேருந்து கடத்தல்: தாலிபன்கள் கைவரிசை

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் ஹெரட் மாகாணத்தில் 45 பயணிகளுடன் பேருந்தை தாலிபன்கள் கடத்தியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் ஷாம்ஷட் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “ஹெரட் மாகாணத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தை தாலிபான்கள் கடத்தியுள்ளனர்.

பேருந்தில் 45 பயணிகள் இருந்துள்ளனர். காலை 7 மணியளவில் இந்தக் கடத்தலில் தாலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தலுக்கு தாலிபான்கள் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அவ்வப்போது ஆப்கன் அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை அமெரிக்கா தலைமையில் நடைபெற்றது. இதன் முடிவில் அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. அவ்வப்போது குண்டு வெடிப்பு சம்பங்களில் தாலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

சினிமா

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்