ஐக்கிய அரபு அமீரகத்தில் 6-வது நாளாக கரோனா அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தில் 6-வது நாளாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு ஊடகம் தரப்பில், “அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கரோனா அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக கரோனா எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,856 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் ஒரு லட்சத்தும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கவனமாகக் கடைப்பிடிக்காததன் காரணமாக தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு கவலை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில்8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 167 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

கரோனா ஊரடங்கால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதுவும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவால் உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்