அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் தடை

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ புளோரிடாவில் புதியவகை கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியவகை கரோனா காரணமாக பிரிட்டன் உட்பட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிலிப்பைன்ஸ் தடை விதித்துள்ளது.

பிலிப்பைன்ஸில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களாக பிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதன் காரணமாகவே பிலிப்பைன்ஸ் அரசு தொற்று பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.

பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

புதிய வகை கரோனா வைரஸ், கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டன் உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 8 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்