முகக்கவசம் அணியாத சிலி அதிபருக்கு அபராதம்

By செய்திப்பிரிவு

முகக்கவசம் அணியாமல் செல்ஃபி எடுத்ததற்காக சிலி அதிபர் செபாஸ்டின் பினரேவுக்கு சுமார் 3,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து சிலி சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “கடந்த வெள்ளிக்கிழமை அன்று முகக்கவசம் அணியாமல் கடற்கரையில் செல்ஃபி எடுத்த அதிபர் செபாஸ்டின் பினேராவுக்கு சுமார் 3,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது செயலுக்கு செபாஸ்டின் மன்னிப்பு கோரியுள்ளார். தென் அமெரிக்க நாடான சிலியில் கரோனா பரவலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதங்களுடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

சிலியில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, சவுதி ஆகிய நாடுகள் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

11 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்