பைசர் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக உள்ளது: ஸ்விட்சர்லாந்து அரசு

By செய்திப்பிரிவு

பைசர் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக உள்ளதாக ஸ்விட்சர்லாந்து அரசின் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அவற்றுள் முதன்மையானதாக பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துகள் உள்ளன. இந்த நிலையில் பைசர் கரோனா தடுப்பு மருந்துகள் அலர்ஜியை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக ஸ்விட்சர்லாந்து மருத்துவக் குழு நடத்திய ஆய்வில் பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்விட்சர்லாந்து மருத்துவக் குழு வெளியிட்ட அறிக்கையில், “எங்களது சோதனை முடிவில் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், நல்ல பலனையும் தருகிறது” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, சவுதி ஆகிய நாடுகளும் கரோனா தடுப்பு மருந்தை மக்களுக்குச் செலுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்