பிரான்ஸ் அதிபருக்கு கரோனா தொற்று: ஸ்பெயின் பிரதமர் தனிமைப்படுத்திக் கொண்டார்

By செய்திப்பிரிவு

பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், அவரைச் சந்தித்ததன் காரணமாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கரோனா அறிகுறி தெரிந்தவுடன், மக்ரோன் கரோனா பரிசோதனை செய்து கொண்டார். தனக்குத் தொற்று இருப்பது உறுதியானதும், தொடர்ந்து ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் மக்ரோனைச் சந்தித்ததன் காரணமாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஸ்பெயின் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ பிரதமர் பெட்ரோ சான்செஸுக்கு விரைவில் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் டிசம்பர் மாதம் 24ஆம் தேதிவரை தனிமைப்படுத்துதலில் இருப்பார். இதன் காரணமாக ஒருவாரத்துக்கான அவரது அனைத்துப் பணிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜேமனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்