கரோனா: உக்ரைனுக்கு சுமார் 300 மில்லியன் டாலர் கடனை வழங்கும் உலக வங்கி

By செய்திப்பிரிவு

குறைந்த வருமானம் கொண்ட உக்ரைனின் ஏழைக் குடும்பங்களுக்கு உதவ சுமார் 300 மில்லியன் டாலர் கடனை உலக வங்கி அளித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கி தரப்பில், “கரோனா தொற்றுநோய் காரணமாக வேலை அல்லது வருமான ஆதாரங்களை இழந்த தனிநபர்களின் பொருளாதாரத்துக்கு உதவ உக்ரைன் அரசுக்கு எங்கள் தரப்பில் சுமார் 300 மில்லியன் டாலர் கடன் வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் கரோனா வைரஸ் பரவியதிலிருந்தே அந்நாட்டின்பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு

உக்ரைனில் ஜனவரி மாதம் முதலே ஊரடங்கு நீடிக்கிறது. இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்தை வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பு மருந்து

உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ஸ்புட்னிக், பைஸர் என்ற பெயரிலான தடுப்பு மருந்துகள் சந்தைக்கு வந்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 6.5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

38 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்