ஸ்மார்ட்போன் கேமரா மூலம் 30 நிமிடங்களில் கரோனா தொற்றை கண்டறியும் புதிய பரிசோதனை

By செய்திப்பிரிவு

ஸ்மார்ட்போன் கேமரா மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிக்க தற்போது பிசிஆர் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்படி, நோயாளியின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கப்படுகிறது. ஆய்வகங்களில் நடத்தப்படும் இந்த பரிசோதனை முடிவை அறிந்து கொள்ள சுமார் 4 முதல் 8 மணி நேரமாகிறது.

இந்நிலையில், ஸ்மார்ட்போன் கேமரா மூலம் கரோனா தொற்றை துல்லியமாகக் கண்டறியும் புதிய சோதனை முறையை அமெரிக்காவின் யு.சி.பெர்கிலே மற்றும் கிளாட்ஸ்டோன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதன்மூலம் 15 முதல் 30 நிமிடங் களில் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இதுகுறித்து பெர்கிலே பயா இன்ஜினீயரிங் பேராசிரியர் டேனியல் கூறியதாவது:

சிஆர்ஐஎஸ்பிஆர் முறையில் ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிகிறோம். இதற்காக சிறப்பு கருவியை உருவாக்கி உள்ளோம். மூக்கில் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரியை இந்த கருவியில் வைக்க வேண்டும். அந்த கருவியின் மேற்பரப்பில் ஸ்மார்ட்போனை பொருத்த வேண்டும்.

சளி மாதிரியை ஆய்வு செய்யும் கருவி, கரோனா வைரஸ் கிருமிகளை ஒளிவில்லைகளாக மாற்றிக் காட்டும். ஸ்மார்ட்போன் கேமரா அந்த ஒளிவில்லைகளை பதிவு செய்யும்போது ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை தெளிவாக கண்டறிய முடியும். அவருக்கு எந்த அளவுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
இந்த நடைமுறை மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் துல்லியமாக முடிவை அறிந்து கொள்ளலாம். எந்த வகையான ஸ்மார்ட்போனையும் பொருத்தும் வகையில் எங்களது கருவியை வடிவமைத்து உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை வென்ற ஜெனிபரும் இந்த ஆராய்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளார். அவர் கூறும்போது, ‘‘எங்களது சோதனை நடைமுறை மூலம் விரை வாக, துல்லியமாக கரோனா தொற்று முடிவை அறிந்துகொள்ள முடியும். ஆய்வக வசதி குறை வாக உள்ள பகுதிகளில் எங்களது கருவி பய னுள்ளதாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்