கரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள மாட்டேன்: பிரேசில் அதிபர்

By செய்திப்பிரிவு

நான் கரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள மாட்டேன் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போல்சனாரோ கூறும்போத், “ நான் உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன். நான் கரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ள போவதில்லை. அது என் உரிமை” என்று தெரிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது.

ஜூலை 7 -ம் தேதி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, அவர் தனிமைபடுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் சில நாட்களில் அவர் குணமடைந்தார்.

கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ ஏற்கெனவே கூறி வந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலின் முக்கிய நகரங்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் விரைவில் நிரம்பலாம் என்று தனியார் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 mins ago

க்ரைம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்