அமெரிக்க மாகாணங்களில் அதிகரிக்கும் கரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 1,53,000 பேர் பாதிப்பு

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,53,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 66 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மைனே மாகாணத்தின் நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குனர் நிரவ் ஷா கூறும்போது, “அமெரிக்காவில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,53,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 60,000 பேர் வரை மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க மாகாணங்களில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் 2-வது கட்ட அலை பரவியதுபோன்று, தற்போது நாள்தோறும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோ பைடன், ‘‘என்னுடைய முதல் பணி, கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தி, அதிலிருந்து மக்களைக் காப்பதாகும்’’ என்று உறுதியளித்துள்ளார்.

உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்