பாகிஸ்தானில் இஸ்லாம் பள்ளியில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; காயம் 70

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் இஸ்லாமியப் பள்ளி அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் மாணவர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். 70 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் போலீஸார் தரப்பில், “பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பெஷாவர் நகரில் உள்ள இஸ்லாமியப் பள்ளியில் இன்று ( செவ்வாய்க்கிழமை) குண்டு வெடித்தது. இதில் மாணவர்கள் உட்பட 7 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் லேடி ரீடிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது கிடைத்த தகவலின்படி பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததாக கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுட்டா நகரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்குப் பிறகு பெஷாவர் நகரில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

குண்டுவெடிப்புப் பகுதியில் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் கவுட்டா நகரில் பிரிவினைவாதிகளால் அவ்வப்போது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளால் இந்தக் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

11 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்