‘‘உங்களுடைய அடுத்த பிறந்த நாளை வெள்ளை மாளிகையில் கொண்டாடுவோம்’’- கமலா ஹாரிஸுக்கு ஜோ பிடன் பிறந்த நாள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

உங்களுடைய அடுத்த பிறந்த நாளை வெள்ளை மாளிகையில் கொண்டாடுவோம் என்று ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இன்று (புதன்கிழமை) தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் கமலா ஹாரிஸுக்கு ஜோ பிடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறும்போது, “ பிறந்த நாள் வாழ்த்துகள் கமலா ஹாரிஸ். அடுத்த வருடம் உங்களது பிறந்த நாளை வெள்ளை மாளிக்கையில் கொண்டாடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3 -ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார். ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்