ட்ரம்ப்- ஜோ பிடன் பங்கேற்கும் மூன்றாவது விவாதம்: தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி ட்ரம்ப் - ஜோ பிடன் பங்கேற்கும் மூன்றாவது விவாதம் அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்புக்கு கரோனா பரவல் ஏற்பட்டதால், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடைபெற இருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது விவாதம் அக்டோபர் 22 ஆம் தேதி டென்னஸில் உள்ள நாஷ்வில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்தை என்.பி.சி. செய்தியாளர் கிறிஸ்டன் வெல்கர் தொகுத்து வழங்குவதாகவும், விவாதத்திற்கு 90 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அதிபருக்கான முதல் விவாதம் செப்டம்பர் 29 ஆம் தேதி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்