அமெரிக்க பொருளாதாரம் 2021 -ம் ஆண்டு சிறந்த இடத்தில் இருக்கும்: ட்ரம்ப் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு சிறப்பானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3 தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி தரப்பில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,

அந்த வகையில் குடியரசுக் கட்சித் தலைவர் ட்ரம்ப் அரிசோனாவில் பேசும்போது, “ மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மீண்டும் அமெரிக்க பொருளாதாரம் சிறப்பானதாக இருக்கும். 2021 ஆம் வருடம் பொருளாதாரத்தில் அமெரிக்கா சிறந்த இடத்தில் இருக்கப் போகிறது. இது நடக்கப் போகிறது” என்றார்.

அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு 80 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் மிகப் பெரிய பொருளாதார இழப்பு அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார். ஆனால் ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்