இலங்கையில் அதிகரிக்கும் கரோனா: முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.10000 அபராதம்

By செய்திப்பிரிவு

இலங்கையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு முகக் கவசத்தை கட்டாயமாக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை ஊடகங்கள், “ இலங்கை அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுவெளியில் முகக் கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதனை பின்பற்றாதவர்களுக்கு ஆறு மாதம் சிறை அல்லது பத்தாயிரம் அபராதம் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கரோனா அதிகரித்ததைத் தொடர்ந்து அங்கு பள்ளிகள், முக்கிய அலுவலகங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை மறைப்பவர்களுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது.

இந்தநிலையில் கோத்தபய ராஜபக்ச தலைமையிலான அரசு கோவிட் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் இறங்கியதன் காரணமாக அங்கு கரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்