4.7 லட்சம் அகதிகள் ஐரோப்பாவுக்கு வருகை

By செய்திப்பிரிவு

மத்திய தரைக் கடலை கடந்து இதுவரை 4 லட்சத்து 73,887 அகதிகள் ஐரோப்பாவுக்கு வந்துள்ளனர் என்று ஜெனீவா வைச் சேர்ந்த சர்வதேச அகதி களுக்கான அமைப்பு தெரிவித் துள்ளது.

சிரியா, இராக், லிபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றனர்.

இதுகுறித்து சர்வதேச அகதி களுக்கான அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு இதுவரை 4 லட்சத்து 73887 அகதிகள் ஐரோப் பாவுக்கு வந்துள்ளனர். அவர் களில் 40 சதவீதம் பேர் சிரியாவைச் சேர்ந்தவர்கள். அதாவது 1.8 லட்சம் சிரியா நாட்டினர் ஐரோப்பாவுக்கு வந்துள் ளனர் என்று தெரிவித்துள்ளது.

கிரீஸ், துருக்கி வழியாக வடக்கு ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்லும் அகதிகள் குரேஷியாவை தாண்டி செல்ல வேண்டும். ஆனால் அந்த நாட்டு அரசு முக்கிய எல்லைகளை அடைத்துள்ளது. இதனால் சுமார் 14 ஆயிரம் அகதிகள் எல்லையில் சிக்கித் தவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

51 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்