கரோனா தொற்று; பாதிக்கப்படும் ஏழு பேரில் ஒருவர் சுகாதாரப் பணியாளர்: உலக சுகாதார அமைப்பு தகவல்

By செய்திப்பிரிவு

உலக முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 7 பேரில் ஒருவர் சுகாதாரப் பணியாளராக உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ உலக முழுவதும் கரோனாவின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படும் 7 பேரில் ஒருவர் சுகாதார பணியாளராக இருக்கிறார். இன்னும் சில நாடுகளில் மூன்றில் ஒருவர் பாதிக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உலக முழுவதும் கரோனா வைரஸுக்கு 1000 செவிலியர் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்புகள் அனைத்தும் சுவாச கோளாறு காரணமாக நடந்துள்ளது. கரோனா தொற்று காலத்தில் சுகாதாரப் பணியாளர்களை காக்க அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சர்வதேச செவிலியர் அமைப்பு குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2 .9 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

இந்த நிலையில் கரோனா தடுப்பு மருந்துகள் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று அமெரிக்காவும், சீனாவும் அறிவித்துள்ளன.

மேலும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் - 5 கரோனா தடுப்பு மருந்தை, இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சோதனைகளுக்காக அனுப்ப அந்நாடு ஒப்பந்தம் போட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்