கரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டது: உண்மையை உடைத்த ஆராய்ச்சியாளர்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் வூஹான் ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டது என்று சீனாவைச் சேர்ந்த நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் லி மெங் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கில் வைராலஜி நிபுணராகப் பணியாற்றிவர் லி மெங். இந்த நிலையில் இவர் கடந்த டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவில் தங்கி இருப்பதாகச் செய்திகள் வெளியாயின.

தற்போது மீண்டும் லி மெங் இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

“நான் நிமோனியா குறித்து சீனாவில் உள்ள ஆய்வகத்தில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அப்போது என்னுடைய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து அந்த ஆய்வகத்தில் இருந்த மேற்பார்வையாளரிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் உலக சுகாதார அமைப்பில் ஆலோசகராக இருக்கிறார். எனது முடிவுகளைக் கூறும்போது அவர் சீன அரசு மற்றும் உலக சுகாதார அமைப்பு சார்பாக நல்ல முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால், அவர் என்னை அமைதியாக இரு. இல்லையென்றால் மாயமாகிப் போவாய் என்று எச்சரித்தார். என் பேச்சை யாரும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் அரசுக்குப் பயந்தார்கள்.

கரோனா வைரஸ் வூஹான் சந்தையில் உருவாகவில்லை. அங்கிருந்த ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டது. நான் இந்த உண்மையை உலகுக்குச் சொல்லவில்லை என்றால் நான் நிச்சயம் வருத்தப்படுவேன்”.

இவ்வாறு லி மெங் தெரிவித்தார்.

முன்னதாக, வூஹானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங், கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பாகவே, சார்ஸ் போன்ற புதிய வைரஸ் சீனாவில் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருந்தார்.

ஆனால், லி வென்லியாங்குக்கு சம்மன் விடுத்த சீன போலீஸார், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தனர். லி வென்லியாங் எச்சரிக்கை விடுத்தது போலவே, கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவியது. இதில் லி வென்லியாங்கின் உயிரும் பறிபோனது.

கரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா உண்மையை மறைக்கிறது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை சீனா மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்