கரோனா விவகாரத்தில் வெளிப்படையாகவே நடந்து கொண்டோம்: சீனா திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் வெளிப்படையாகவே நடந்து கொண்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீனாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, ”கரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் மிகவும் வெளிப்படையாகவே நடந்து கொண்டோம். ஒரு கோடிக்கும் அதிகமான மக்களை இந்த தொற்று நோயிலிருந்து காக்க உதவினோம். இந்த தொற்று நோய் காலத்தில் பொருளாதாரத்துக்கு திரும்பிய முதல் நாடு சீனாதான்” என்று தெரிவித்தார்.

சீனாவின் ஏற்றுமதி தொடர்ச்சியாக 3 மாதங்களாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் வூஹான் நகரில்தான் கரோனா முதல் முதலாக பரவியது. சீனாவில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 4 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் பலியாகினர்.

கரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மையான தகவல்களை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ், சீனாவுடன் கூட்டு சேர்ந்து, சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்தது. சீனாவும் மறுத்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்புக்கு அளித்துவரும் நிதியையும் நிறுத்தினார். மேலும், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்