ஈரானில் நான்கு மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

By செய்திப்பிரிவு

ஈரானில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுவதாக அதிபர் ஹசன் ரவ்ஹானி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “ ஈரானில் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகள் உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக பெரும் சுமையை சுமக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரானில் நான்கு மாதங்களாக கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஈரானில் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றன.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். அங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

க்ரைம்

45 mins ago

சினிமா

44 mins ago

இந்தியா

50 mins ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

58 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்