கரோனா வைரஸ் உலக அளவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது: சிங்கப்பூர் பிரதமர்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு ஏற்பட்ட பேரழிவு என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லீ சியன் லூங் கூறும்போது, “கரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இது மனித குலத்திற்கு ஏற்படக்கூடிய கொடிய நோய் அல்ல. இந்த வகை நோய்கள் மூலம் இந்த அவசரகாலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் எதிர்காலத் தொற்றுநோய்களை ஆவணப்படுத்த உதவும்” என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கி இருந்த இடங்கள் அனைத்தையும் கரோனா தொற்று இல்லாத இடங்களாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தொழிலாளர் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். மிக நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ள அத்தகைய விடுதிகளில்தான் அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. எனவே, விடுதிகளை மையமாக வைத்து சிங்கப்பூர் அரசு மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரமாகச் செய்தது. இதன் காரணமாக தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

உலகம் முழுவதும் சுமார் 2.6 கோடிக்கு அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்