மியான்மரில் கரோனா தீவிரம்: பள்ளிகளை மூட உத்தரவு

By செய்திப்பிரிவு

மியான்மரில் கரோனா பரவல் தீவிரமாகி இருப்பதைத் தொடர்ந்து, அங்கு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மியான்மர் கல்வித்துறை அமைச்சகம் தரப்பில், ''மியான்மரில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மியான்மரில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூரில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த முடிவை மியான்மர் அரசு எடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மரில் இன்று 100க்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மியான்மரில் 557 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 341 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் பலியாகினர்.

ஜூலை மாதம் வரை மியான்மரில் கரோனா கட்டுக்குள் இருந்ததாகவும், ஆகஸ்ட் மாதத்திலிருந்து கரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவலைத் தடுக்க மியான்மர் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மார்ச் மாதம் முதலே மியான்மர் எல்லைகளை மூடியுள்ளது.

உலகம் முழுவதும் 2.2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்