பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 775 பேர் பாதிப்பு

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 775 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை தரப்பில், “ பாகிஸ்தான் 24 மணி நேரத்தில் 775 பேருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 2,91,588 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,219 பேர் பலியாகி உள்ளனர்.
2,73,579 குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தானில் கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10 -ம் தேதி தளர்த்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து விமான போக்குவரத்து அறிவிப்பை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்தார்.

இந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால், கரோனா தொற்று அதிகமாக உள்ள பஞ்சாப், சிந்து மாகாணங்களில் ஸ்மார்ட் லாக்டவுனை பாகிஸ்தான் அரசு கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு இறங்கி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்