கரோனா பரவல்: ஊரடங்கை நீக்கிய வடகொரியா

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாக தென்கொரியாவின் எல்லையோரத்தில் அமைந்துள்ள கேசாங்கில் நகரில் வடகொரியா ஊரடங்கு விதித்திருந்தது. இந்த நிலையில் தற்போது அங்கு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் எல்லைப்பகுதி நகரான கேசாங்கில் கரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள் அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஊரடங்கை கிம் நீக்கி இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

மேலும் கரோனா பரவலை தடுக்கும் வகையில் எல்லை மூடலை வடகொரியா தொடரும் என்றும் பிற நாடுகளின் உதவி இதில் தேவை இல்லை என்று வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கரோனா பரவலை தடுக்க அதிபர் கிம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் போது வடகொரியாவில் மட்டும் கரோனா நோயாளிகள் குறித்த எந்த பாதிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வடகொரியாவில் கரோனா தீவிரம் காட்ட தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்