மாஸ்கோவில் கரோனா பலி 5 ஆயிரத்தை நெருங்குகிறது

By செய்திப்பிரிவு

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது.

இதுகுறித்து ரஷ்ய நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, '' மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,585 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 70க்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கரோனாவால் இதுவரை 14,931 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,189 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவால் இதுவரை 8,87,536 பேர் ரஷ்யாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,93,422 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12 -ம் தேதி ரஷ்யா அதிகாரபூர்வமாக பதிவு செய்ய உள்ளது.

கடந்த ஜூன் மாதம் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை ரஷ்யாவின் செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டி மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்